பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின் சூளுரை 

“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற இலக்கில், ஒன்றுபட்டு நிற்போம் வென்றுகாட்டியே தீருவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்பதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத மற்றும் மாநில உரிமைகளை பறித்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சிறந்த களமாகும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கு அனைவரினது ஒத்துழைப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார். 

Social Share

Leave a Reply