மன்னாரில் மனித உரிமை நிலையம்…

மன்னாரில் மனித உரிமை சிகிச்சை நிலையம் “ரைட் டு லைப்” நிறுவனத்தினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் கடந்த 18ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. 

நாட்டில் இருபது வருடங்களாக மனித உரிமைகள் தொடர்பாக செயற்பட்டு வரும் இந்நிறுவனத்தின் அலுவலகம் தற்போது மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் “ரைட் டு லைப்”நிறுவனத்தின் பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்கா, திட்ட இணைப்பாளர் பிரசாந்தன், திட்ட அலுவலகர் மதுஷாலினி மற்றும்  மன்னார் இணைப்பாளர் எஸ்.டிலக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 25 நபர்களுக்கு, மனித உரிமை பாதுகாவலரின் பொறுப்புக்கள் மற்றும் பங்குகள் தொடர்பிலான கலந்துரையாடல் அமர்வும் இடம்பெற்றது. 

Social Share

Leave a Reply