பல்வேறு விதமான படைப்புகளுக்கு நாணயத் தாள்களைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
செல்லுபடியாகும் நாணயத் தாள்களைப் பயன்படுத்தி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரிக்கும் போக்கு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கப்படுகின்றமை குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சபையின் அனுமதியின்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது குற்றச் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது மூன்றாண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.