இலங்கையின் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு பாராளுமன்றில் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 23ஆம் திகதியன்று பாராளுமன்றில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்; பேரவை, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
