அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்நிய செலாவணி சந்தையில் நேற்றைய நிலவரத்தின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 83 ரூபா 43 சதமாக பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இந்திய ரூபாவின் பெறுமதி 83 ரூபா 40 சதமாக வீழ்ச்சி கண்டதையடுத்து இந்திய ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது.
சீனாவின் யுவான் பெறுமதியின் வீழ்ச்சியே ஆசிய நாடுகளின் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ருபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இந்திய இறக்குமதியாளர் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளமை குறித்து கவலை வௌயிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஆரம்பமான அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 0.33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.