இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 வீதத்தில் இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை சுமார் 20 திட்டங்களுக்கு நீர் திறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 387 திட்டங்களுக்கும் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீர் வழங்கப்படும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.