நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை முன்வைத்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு நேற்று(22) கருத்து தெரிவிக்கும் போது வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த யோசனை பின்பற்றபடாவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் கட்சியே பொதுத் தேர்தலிலும் வெற்றியடையும் என்பதால், அது நாட்டிற்கு உகந்ததல்ல எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.