உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய நூல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ஈஸ்டர் படுகொலை” என்ற பெயரில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.