உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் “குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யாரென எனக்குத் தெரியும்” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டு அவரிடம் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல எனவும் நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.