ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 145 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நகரில் உள்ள இசைக்கச்சேரி அரங்கிற்குள் (Crocus City Hall) வெள்ளிக்கிழமை இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதன்போது, பயங்கரவாதிகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு IS அமைப்பு உரிமை கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய 04 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.