இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீடித்துள்ளது.
இதனுடாக வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகளவில் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னர், இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த தீர்மானம் ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடை, எதிர்வரும் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.
உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் விலை பாதியாக குறைந்துள்ளமை மற்றும் விளைச்சல் அதிகரித்தமையினால் ஏற்றுமதி தடை நீக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும், காலவரையறை இன்றி இந்த தடை அமுலில் இருக்கும் என இந்திய அரசாங்கம் நேற்று(23) அறிவித்துள்ளது.
இதனுடாக ஏனைய நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள், வெங்காயத்தினை அதிகளவு விலைக்கு ஏற்றுமதி செய்வதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.