பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில், பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றபடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியான அல்லது காலாவதி திகதியை நெருங்கி இருக்கும் பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
எனவே, இத்தகைய மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.