மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 ரக துப்பாக்கியொன்று காணாமல் போயுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் பாதுகாப்பு சாவடியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உரிய பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி திருடப்பட்டதா அல்லது காணாமல் போனதற்கு வேறு காரணங்கள் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.