பாராளுமன்ற செலவீனங்களை எதிர் தரப்பினரிடம் கோருவதற்கு யோசனை… 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்று நாள் பாராளுமன்ற விவாதத்துக்கான செலவினத்தை எதிர் தரப்பினரிடமிருந்து கோருவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. 

அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது இந்த யோசனையை முன்வைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். 

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்ற செயற்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
,
மூன்று நாள் விவாதத்தின் காரணமாக பாராளுமன்றத்திற்கு 45 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் விசேட உரையாற்றிய சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில், ஆளும் தரப்பினரே விவாதத்தை மூன்று நாட்களுக்கு நீடிக்குமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது கோரிக்கை விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

ஆளும் தரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றிருந்தமையால், நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே விவாதத்தை மேலும் ஒரு நாள் நீடித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply