மட்டுப்படுத்தப்பட்ட இந்திய முட்டை இறக்குமதி

தேவையான முட்டைகள் கையிருப்பில் உள்ளமையால் இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் தலா 5 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை 43 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply