அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.
அவர்கள் இன்று (29) முற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைதிகள் தேடும் நடவடிக்கைளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.