உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ள போதும் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால், தாக்குதல் தொடர்பாக புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியாகும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றதாகவும் மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.