ராகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார்.
பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் தடுப்பூசியான ‘கோ-அமோக்ஸிக்லாவ்’ செலுத்தப்பட்டதன் பின்பு நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், காது தொடர்பான பிரச்சினையின் காரணமாக கடந்த 22ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், வைத்தியசாலை மட்டத்தில் உள்ளக விசாரணைகள் நடைபெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.