இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 11வது போட்டியில் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
லக்னோவில் இன்று(30) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
லக்னோவ் அணி தலைவர் கே.எல். ராகுலுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாக இந்த போட்டியில் தலைமை பொறுப்பு பூரனுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி, லக்னோவ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
லக்னோவ் அணி சார்பில் டி கொக் 54 ஓட்டங்களையும், குர்னல் பாண்டியா 43 ஓட்டங்களையும் மற்றும் பூரன் 42 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
200 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்படி, லக்னோவ் அணி இந்த போட்டியில் 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் அணி தலைவர் தவான் 70 ஓட்டங்களையும் ஜானி பேர்ஸ்டோவ் 42 ஓட்டங்களையும் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் 28 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
லக்னோவ் அணி சார்பில் பந்துவீச்சில் மயங் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோசின் கான் 2 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக கைப்பற்றினர்.