ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம்  தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்து, அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தெரியப்படுத்துவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தேர்தலின் போது பயன்படுத்தப்படும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply