இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிக்கெட் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கடந்த மாதம் 27ம் திகதி மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவரான ரோஹித் சர்மா ஆட்டமிழந்த போது, போட்டியை தொலைக்காட்சியில் பாரத்துக் கொண்டிருந்த நபர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நபர் ஒருவர் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, குறித்த நபருக்கு அருகில் இருந்த அவருடைய நண்பருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தன்னுடைய உறவினர் ஒருவரை அழைத்து வந்த நண்பர், இருவரும் இணைந்து மற்றைய நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது திபிலே எனும் 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் சென்னை அணியின் இரசிகர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை தாக்கிய இருவரையும், அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.