2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமானளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கியின் அறிக்கையின் படி, இலங்கையில் 2.2% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், இலங்கை மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.