உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் மக்கள் பாவனைக்கு

தேசிய மின்கட்டமைப்பிற்கு 120 மெகாவோட் கொள்ளளவை சேர்க்கும் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இந்த மாத இறுதியில்
மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 513 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள பல வயல் நிலங்களுக்கு நீர்பாசனம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மற்றும் மொனராகலை பகுதி மக்களுக்கும் இதன்மூலம் குடிநீர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply