நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்

நாளை (22/11) தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் திறக்கப்படுகிறது.

அதற்கமைய கொவிட் தொற்று அறிகுறிகள் கண்டறியப்படும் மாணவர்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தும் முகமாக பாடசாலைகளில் பிரத்தியேக தனிமைப்படுத்தல் பிரிவு ஒன்றினை உருவாக்குவது கட்டாயம் என்ற சுகாதார வழிகாட்டி அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது.

அதேவேளை நோய்த்தொற்று அறிகுறி இருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிக்காதிருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி அசேல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் பாடசாலை மாணவர்களுக்கென வெளியிடப்பட்டுள்ள குறித்த சுகாதார வழிகாட்டியை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்

Social Share

Leave a Reply