மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னிப் படைத் தலைமையகம், 59வது படையணி, 64 வது படையணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய மாபெரும் மரதனோட்டம் மற்றும் சைக்கிள் ஓட்ட போட்டி இன்று(07) நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டம் மாமூலை டைமன் விளையாட்டு மைதான முன்றலில் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகிய போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த விளையாட்டு போட்டியினை 59 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன விஜயசூரிய ஆரம்பித்து வைத்திருந்தார்.
