பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு

பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்புரமழான் தினத்தன்று(11) பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 7500 மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  

இதற்கமைய எதிர்வரும் 11ம் திகதி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரை இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். 

ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பள்ளிவாசல்களின் மௌலவிகளுடன் கலந்துரையாடி உரிய பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

நாடு பூராகவும் உள்ள 2,453 பள்ளிவாசல்களில் 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510  விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 முப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

Social Share

Leave a Reply