புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி புதிதாக 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்திற்கமைய புதிதாக ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சாதாரண தர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு 4,441 ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 6,500 ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.