மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இன்று (14) நண்பகல் 12.10 அளவில் நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.