யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள், மீண்டும் கைது  

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டுக் குற்றச்சாட்டிற்காக ஒரு வருட சிறை தண்டனையை அனுபவித்து வந்த கைதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருமே நேற்று(16) காலை  தப்பியோடியுள்ளனர்.

இருப்பினும் சாவகச்சேரி பொலிஸார், 30 நிமிடங்களுக்குள் இருவரையும் கைது செய்து மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தியுள்ளனர். 

தப்பியோடிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 6 மாத சாதாரண சிறை தண்டனையும், தலா 1500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். 

தண்டப் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு மாத கால சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார். 

Social Share

Leave a Reply