மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவரினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மியன்மார் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்க்பபட்டுள்ளது.