ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் தடைப்பட்டுள்ளதுடன், விமான நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமை மற்றும் கனமழை காரணமாக துபாய்க்கு வரவிருந்த 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
துபாயில் வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்துள்ளதுடன், வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், கடந்த 75 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த 15ம் திகதி இரவு ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருவதுடன், நாளை(18) வரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.