பிணை முறிகள் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை 

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் அடிப்படையில் இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளனர். 

இலங்கை திருப்பிச் செலுத்தாத இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை தௌிவுபடுத்தி நிதி அமைச்சு நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடன் இரத்து தொடர்பாக மார்ச் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் உடன்படவில்லை என்பதுடன், கடன்களின் 28 வீதத்தை குறைத்தல் உள்ளிட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கம் பிணை முறி உரிமையாளர்களிடம் முன்வைத்திருந்தது. 

இந்நிலையில், குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள பிணை முறி உரிமையாளர்கள், மேலதிக வட்டியுடன் குறித்த பிணை முறிகளை மீள விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையினால் பிணை முறி உரிமையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள், சர்வதேச நாணய நிதிய விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதுடன், பிணைமுறி உரிமையாளர்களின் யோசனைகள் குறித்த விதிமுறைகளுக்கு புறம்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply