மன்னார் மாவட்டத்திற்கு ஸ்மார்ட் எதிர்காலம்

மன்னாரிற்கு வரவிருக்கும் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் ஊடக சந்திப்பு.

மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம், நடமாடும் சேவை மூலம் மன்னார் மாவட்ட மக்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை மற்றும் பல்வேறு உதவித் திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவில் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்களின் ஒத்துழைப்போடு,இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பங்கு பற்றுதலுடன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் சேவையின் முலம் மன்னார் மாவட்ட மக்கள் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்வதுடன் பின்தங்கிய மாணவர்கள்,மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடையுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply