யாழ்ப்பாணத்தில் பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பூச்சி தாக்குதலினால் ஏற்பட்ட சுகவீனத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
52 வயதுடைய குறித்த நபருக்கு, காதின் கீழ் பகுதியல் பூச்சியொன்று தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த நபரால், எந்த வகையான பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியதாக அடையாளம் காண இயலவில்லை.
இந்நிலையில் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், நேற்று(18) அவர் உயிரிழந்துள்ளார்.