ரயில் பெட்டிகள் இல்லாமையினால் சில ரயில் சேவைகளை ஏப்ரல் 25ம் திகதி வரை ரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதையின் ஊடான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து(இரவு 7.15 மணி) பாதுக்காவிற்கும், கொழும்பு கோட்டையிலிருந்து(காலை 7.02) ராகமவிற்கும், ராகமவிலிருந்து(காலை 7.30) கொழும்பு கோட்டைக்கும், பாதுக்காவில் இருந்து(காலை 5.20) கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.