சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவை சர்வோதய தலைமையகத்திற்கு இன்று (19) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் பதிவிட்டார்.

மேலும், உறவினர்களுக்கும் அனுதாபம் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன உள்ளிட்ட பலர் இதன்போது இணைந்திருந்தனர்.

Social Share

Leave a Reply