முக்கிய இரு எதிர்கட்சிகளையும் நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் முன்மொழிவுகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளவில்லை என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி  தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகள்,  அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் முன்மொழிவுகளை பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித்திடம் சமர்பித்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இருப்பினும், குறித்த இரு முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே, முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் ஏனைய கட்சிகளின்  முன்மொழிவுகளையும் வரவேற்பதாகவும் அருட்தந்தை சிறில் காமினி  தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply