மீண்டும் 250 ஓட்டங்களை கடந்த ஹைதராபாத் அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில் 250 மொத்த ஓட்ட எண்ணிகையை இன்றைய போட்டி உட்பட மூன்று போட்டிகளில் கடந்துள்ளது. 

டெல்லியில் இன்று(20.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 89 ஓட்டங்களையும், சபாஷ் அஹமட் 59 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ஓட்டங்களையும் மற்றும் நிதிஷ் ரெட்டி 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

267 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

டெல்லி அணி சார்பில் ஜேக் பிரெசர் 18 பந்துகளில் 65 ஓட்டங்களையும், அணி தலைவர் ரிஷாப் பாண்ட் 44 ஓட்டங்களையும் மற்றும் அபிஷேக் பூரேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், மயங் மார்கன்டே மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறியதுடன் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 7ம் இடத்தில் உள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் நாளை(21.04)  நடைபெறவுள்ளன. மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Social Share

Leave a Reply