நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று(21.04) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 8.45 மணியளவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.