உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை தனக்கு வழங்குமாறு கோரும் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களைப் போன்று, குறித்த காலப்பகுதியில் ஆட்சியிலிருந்தவர்களும் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நாட்டின் தலைவரும், பாதுகாப்பு அமைச்சர் ஒழிந்துக் கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இழப்பீடு செலுத்துவதால் மாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காது  எனவும்  குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அவ்வாறெனில் இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனுக்கும் இழப்பீட்டு தொகையொன்றை அறிவித்திருக்கலாமா, என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். 

தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலை நாட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply