தேயிலைத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியின் தேயிலைத் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து நேற்று (21.04.2024) மாலை சம்பவித்துள்ளது.

ஹட்டன் – டிக்கோயா தீயணைப்பு பிரிவு,தொழிலாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply