ராகவா லாரன்சுடன் இணைந்த பிரபல இயக்குனர் 

பிரபல திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கதை வசனத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடன இயக்குனரும்  நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கவுள்ளதாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளதாவது, “வெற்றி மாறன் திரைக்கதையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அவரது திரைக்கதையை கேள்விப்பட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். வெற்றிமாறன் அவர்கள் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஏற்கனவே அறிவித்த 2 படஙக்ளுக்கு பிறகு இந்த படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றிமாறன் அவர்களுக்கும், இந்த படத்தை தயாரிக்கும் கதிரேசன் அவர்களுக்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது, ‘பென்ஸ்’ மற்றும் ‘ஹண்டர்’ ஆகிய திரைப்படங்களின் நடிக்கவுள்ளதாக அண்யைமில் அறிவிப்புகள் வெளியான நிலையில், இந்த குறித்த திரைப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

இதேவேளை, இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் அதன் பின்னர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply