தியத்தலாவ கார் பந்தய விபத்து – சாரதிகள் இருவர் கைது

தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியத்தலாவ கார் பந்தயத் திடலில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

Foxhill 2024 கார் பந்தயத்தின் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 23 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Social Share

Leave a Reply