அமெரிக்க கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான கடற்படை பயிற்சிகள் ஆரம்பமாகின.
கடற்படைபயிற்சிகள் திருகோணமலையில் இன்று காலை ஆரம்பமாகின.
ஒத்துழைப்பு, தயார் நிலை மற்றும் பயிற்சி எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த கடற்படை பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
சுதந்திர இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை பேணுதல் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவித்தல், கடல்சார் கூட்டாண்மையை பராமரித்தல், மற்றும் வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக குறித்த பயிற்சித் திட்டங்கள் 05வது தடவையாகவும் இடம்பெறுகின்றது.