நடமாடும் சேவையில் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லையென அமைச்சர் மனுஷநாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார்.
மன்னாரில், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் கடந்த 21,22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட போது அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது ஜனாதிபதி அவர்களிடம் சென்று மாவட்டத்தின் அபிவிருத்திக்கென நிதியுதவி கோரி நிற்கின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பண்முகப்பட்ட வரவு செலவு திட்டத்தைக் கொண்டே அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த மன்னார் மாவட்டமானது, எமது நாட்டிற்கு ஒரு சர்வதேச நுழைவாயிலாகக் காணப்படுகிறது,அபிவிருத்தி காண வேண்டிய இம் மாவட்டம் இங்குள்ள அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால், பின்னடைவைக் கண்டுவருகின்றது” என தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.