தேசிய மக்கள் சக்தியின் விவாத திகதியை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்காக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதிக்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்கவில்லை.

அடுத்த மாதம் 07, 09, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடாத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக என அறிவித்தது

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதம் மூலம் அறிவித்தது.

இந்நிலையில், குறித்த கடிதத்திற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தி 02 விவாதங்களுக்கும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளை பரிந்துரைத்தது.

மேலும் விவாதங்களுக்கும தாம் தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply