ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்த வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒன்று வட மாகாண கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அணிகள் நொதேர்ன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. Vavuniya Vikings, Jaffna Gladiators, Mullai Panthers, Kilinochi Fighters, Mannar Kings எனும் பெயர்களில் மாவட்ட அணிகள் மோதவுள்ளன.
வவுனியா நகரசபை மைதானத்தில் ஏப்ரல் 27 ஆம் திகதி காலை ஆரம்ப நிகழ்வுடன் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடர் மே 19 ஆம் திகதி வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக தினமும் இரண்டு போட்டிகள் என்ற அடிப்படையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அணிகள் மோதும் இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை பார்வையிடவும் உங்கள் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் பார்வையாளர்களை மைதானத்துக்கு வட மாகாண கிரிக்கெட் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் யோகேந்திரன் ரதீபன் அழைக்கின்றார்.
போட்டியின் நேரடி ஒளிபரப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. பிரமாண்டமான ரீதியில் இந்த தொடர் நடாத்தப்படவுள்ளது.