மன்னாரில் ஊடகவியலாளரின் நூல் வெளியீட்டு விழா

மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின்
“மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரைப் பிரதேசமும்” என்ற இடப்பெயராய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (23/5 )காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இந்த நூலில், மகாவம்ச விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் வந்திறங்கிய இடமாக மன்னார் கட்டுக்கரைக் குளம், சங்ககால இலக்கிய நூல்களை மேற்கோள் காட்டி , மகாவம்ச நூல்கள் கூறும் இடபெயர்வுகள், மற்றும் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இடப்பெயர்வுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் றோட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன், அதன் தலைவர் றொபேட் பீரீஸின் தலைமையில் வெளியீடு செய்யப்பட்ட இந்த நூல்வெளியீட்டு விழாவில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply