20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையை சேர்ந்த நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024ம் ஆண்டிற்கான 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது, பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையை சேர்ந்த நெத்மிகா மதுஷானி ஹேரத் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.