ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட 06 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
கட்சியின் ஒழுக்காற்றுக் குழு வழங்கிய ஆலோசணைகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி பேராசிரியர் G.L.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, டிலான் பெரேரா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கல்பத்தி, K.P.S.குமாரசிரி ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
இந்நிலையில் அவர்களின் நியாயப்படுத்தலை கடிதம் மூலம் கேட்டறிந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.